உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாகராஜ் நகரின் மௌஐமா கிராமத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்தது. உதய் குமார் என்றவரின் மனைவி மஞ்சு. அவருக்கு ஒரு தங்கை உள்ளார். உதய் குமாரின் தம்பி உமேஷ் தனது ண்ணியின் தங்கையை மூன்று ஆண்டுகளாக காதலித்து கொண்டிருந்தார். இரு குடும்பங்களும் இதைத் தெரிந்து கொண்டு ஒப்புக் கொண்டிருந்தன. உமேஷ் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியளித்திருந்தார்.
ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்பு திடீரென திருமணத்தை மறுத்துவ வேறு ஒரு பெண்ணை விரும்புவதாகக் கூறினார். இதனால் மஞ்சுவின் தங்கை மிகவும் வருத்தமடைந்து மன அழுத்தத்தில் தற்கொலை செய்ய முயன்றார். இந்த ஏமாற்றத்தால் மஞ்சு கோபம் கொண்டு உமேஷைப் பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்தார். அக்டோபர் 16 ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு உமேஷ் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது மஞ்சு அவர் அறைக்குள் சென்றார். கையில் விசிறி (கூர்மையான கத்தி போன்ற கருவி) வைத்திருந்தார். உமேஷின் ஆணுறுப்பை வெட்டினார். உமேஷ் வலியால் கத்தி எழுந்தார். குடும்பத்தினர் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஒரு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தனர். உமேஷின் உயிரைக் காப்பாற்றினர். அவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் மஞ்சு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரைத் தேடி வருகின்றனர்.
