இன்று தீபாவளி கொண்டாட்டத்தில் உலகமே மும்முரமாக இருக்கிறது. விளக்குகள் ஏற்றி, இனிப்புகள் பகிர்ந்து, பட்டாசு வெடித்து பலரும் இந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால் எல்லோருக்கும் கொண்டாட்டங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. வாழ்க்கைப் போராட்டத்தில் சிலருக்கு இதுபோன்ற பண்டிகைகள் பெரிய மகிழ்ச்சியைத் தராமல் போகலாம். உத்தரபிரதேச மாநிலம் ஹாப்பூர் பகுதியில் ஒரு வயதான அம்மாவுக்கு தீபாவளி சிறப்பானதாக மாறியது போலீசாரின் உதவியால். அவர்கள் செய்த நல்ல காரியத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாலையோரம் விளக்குகள் விற்கும் வயதான பாட்டியிடம் அனைத்து விளக்குகளையும் வாங்கி, பணம் கொடுத்து உதவினர் போலீசார். ஸ்டேஷன் இன்-சார்ஜ் விஜய் குப்தா தலைமையில் நடந்த இந்த உதவி, பாட்டியின் தீபாவளியை வெளிச்சமும் இனிப்பும் நிறைந்ததாக மாற்றியது. விற்கப்படாத விளக்குகளுடன் அமர்ந்திருந்த பாட்டிக்கு இது பெரிய ஆறுதலாக அமைந்தது. வீடியோ விரைவில் பரவி, பலரும் பாராட்டி கமெண்ட்கள் பதிவு செய்து வருகின்றனர்.