இந்தோனேசியாவை சேர்ந்த அராப் அப்துர்ரஹ்மான் எனும் வாலிபர் தற்போது சமூக வலைதளத்தில் பிரபலம் ஆக்கியுள்ளார். இவர் சாலையில் ஸ்கூட்டர் ஓட்டி சென்று பிரபலமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. காரணம் அவரது ஸ்கூட்டர் மற்ற சாதாரண ஸ்கூட்டர் போன்று இல்லாமல் நேர் எதிராக தோற்றமளிக்கிறது. அதாவது ஸ்கூட்டரில் அவர் செல்லும் போது அது ரிவர்சில் செல்வது போல் உதிரி பாகங்களை அமைத்துள்ளார்.

அதாவது ஸ்கூட்டரின் முகப்பு பக்கம் பின்பகுதியில் அமைக்கப்பட்டு பின்னால் இருக்கும் சைலன்ஸர் பகுதி முன்பக்கத்தில் வைத்து வடிவமைத்துள்ளார். அராப் இந்த ஸ்கூட்டரின் சீட்டிற்கும் ஹேண்டில் பார்க்கும் நடுவே அமர்ந்து கொண்டு சாலையில் ஓட்டி சென்றுள்ளார். இந்த ஸ்கூட்டர் பார்ப்பதற்கு வினோதமாக இருப்பதால் சாலையில் செல்லும் மற்ற பயணிகள் குழம்பிப் போய் உள்ளனர். சிலர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில் அதற்கு நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.