எத்தியோப்பியாவின் அம்ஹாராவில் உள்ளூர் பானொ போராளிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது பெரிய பிராந்தியமான அப்பகுதியில் இரு குழுக்கள் இடையே மோதல் அதிகரித்து வருவதால் அந்நாட்டு அரசாங்கம் அவசரகால நிலை பிரகடனம் செய்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் மோதலை கட்டுப்படுத்துவது கடினமான செயலாகி விட்ட காரணத்தினால் அவசர காலநிலை பிரகடனப்படுத்துவது அத்தியாவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வாரண்ட் இல்லாமல் கைது செய்ய உத்தரவிட்டதோடு, பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு தடை போடப்பட்டுள்ளது.