அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சார பயணங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொட்டு, அவர் சமீபத்தில் நடந்த ஒரு எழுச்சி பயணக் கூட்டத்தில் கடும் விமர்சனம் செய்தார். அங்கு பேசிய பழனிச்சாமி, “பல மாவட்டங்களில் நடந்த எழுச்சி பயணக் கூட்டங்களில் ஒரு காவலர்களை கூட பாதுகாப்பு பணியில் பார்க்க முடியாது. ஆனால் இன்றைய தினம் காவலர்கள் பாதுகாப்பு வழங்குகிறார்கள்.
இந்த பாதுகாப்பை மற்ற கட்சிக்கும் கொடுத்திருந்தால் 41 உயிர் போய் இருக்காது” என்று கூறி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக “எதற்கு ஓரவஞ்சனை” என்று கேள்வி எழுப்பினார். இந்தப் பேச்சு இன்ஸ்டாகிராமில் காணொளியாக வெளியாகி வைரல் ஆகி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
