கரூரில் கடந்த சனிக்கிழமை தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 9 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தது மாநிலம் முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விமர்சனங்களும், சமூக வலைதளங்களில் துயரக் குறிப்புகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

“>

 

இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு மதிமுக  பொதுச் செயலாளர் வைகோ நிகழ்த்திய உரை மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும், பொதுமக்களின் பாதுகாப்பு அரசியல் கட்சிகளின் முதன்மை கடமை என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.

தற்போதைய கரூர் துயரச் சம்பவத்துடன் அவரது பழைய உரை ஒப்பிடப்பட்டு பரவுவதால், அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் இது குறித்து விவாதம் தீவிரமடைந்துள்ளது.