கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், “அவ்வளவு பேர் உயிரிழந்திருக்கும்போது, அதே சமயம் ‘குஷி’ திரைப்பட ரீரிலீஸில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சமூகத்தின் இந்த மனநிலையைப் பார்த்தால் எங்கு போகிறது என எண்ணி, எனக்கு தூக்கம் கூட வரவில்லை” என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். “திமுக மற்றும் தவெக இடையே ரகசிய தொடர்பு உள்ளது. அதே சமயம், பாஜக விஜய்க்கு வெளிப்படையாக ஆதரவு அளித்து வருகிறது. இந்த நிலைமைகள் அனைத்தும் தெளிவாகக் காட்சியளிக்கின்றன” என சீமான் குறிப்பிட்டார். அவரது இந்தக் கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.