விண்வெளியில் சுற்றித் திரியும் ஒரு ராக்கெட் பாகம், வரும் ஆகஸ்ட் மாதம் நிலவில் மோதவுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்திற்குச் சொந்தமான ‘பால்கன் 9’ (Falcon 9) ராக்கெட்டின் ஒரு பகுதிதான் இவ்வாறு நிலவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

கடந்த 2025-ம் ஆண்டு நிலவுக்கு லேண்டர்களைக் கொண்டு சென்ற இந்த ராக்கெட்டின் மேல் பகுதி, எரிபொருள் தீர்ந்த நிலையில் விண்வெளி குப்பையாக பூமியைச் சுற்றி வந்தது.

ஆனால், இப்போது பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விலகி, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் சிக்கியுள்ள இது, வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நிலவின் மேற்பரப்பில் பயங்கர வேகத்தில் மோதவுள்ளது.

மணிக்கு சுமார் 8,700 கிலோமீட்டர் வேகத்தில் இது மோதும்போது நிலவில் ஒரு பெரிய பள்ளம் (Crater) உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்வெளி கழிவுகளால் நிலவுக்கு ஆபத்தா? அல்லது இது ஒரு அறிவியல் ஆய்வா? என இணையத்தில் பெரும் விவாதமே தொடங்கிவிட்டது.