ஈரான் நாட்டின் ராணுவம் தற்போது முற்றிலும் நிலைதடுமாறி, பெரும் குழப்பமான சூழ்நிலையில் தவித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

இதுமட்டுமன்றி, ஈரானின் கடற்படையும், விமானப்படையும் போரில் முற்றிலும் தோற்று, சின்னாபின்னமாக அழிந்துவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆரம்பத்திலேயே அமெரிக்காவுடன் சுமுகமான பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டிருந்தால் அது ஈரானுக்கு சாதகமாக இருந்திருக்கும் எனக் குறிப்பிட்ட டிரம்ப், அவர்கள் வீம்பாக இருந்து காலதாமதம் செய்ததற்கான மிகக் கடுமையான விலையை தற்போது தங்களது ராணுவ இழப்புகள் மூலம் தந்து கொண்டிருக்கிறார்கள் என்று எச்சரித்துள்ளார்.

காலம் கடந்து நிற்பதால் ஈரான் இதற்கான உரிய விலையை கொடுத்தே தீரவேண்டும் என்று டெல்லி டூ வாஷிங்டன் வரை அதிரும் வகையில் டிரம்ப் விடுத்துள்ள இந்த அதிரடி அறிக்கை, தற்போது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.