சாதாரண உணவுகளைக்கூட வித்தியாசமான முறையில் சமைத்துச் சாப்பிடும் வழக்கம் உலகெங்கிலும் பலரிடம் உள்ளது. அந்த வகையில், முட்டையை அவித்த பிறகு அதை பிங்க் நிறமாக மாற்ற ஒருவர் கையாண்ட எளிய மற்றும் ஆரோக்கியமான டெக்னிக்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் முதலில் முட்டைகளை வழக்கம் போல அவித்து எடுத்துக்கொள்கிறார். பின்னர், பீட்ரூட்டை நன்றாக அரைத்து அதன் சாற்றை (ஜூஸ்) எடுத்து, அவித்த முட்டைகளை அந்த பீட்ரூட் சாறில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஊற வைக்கிறார்.
ஊறிய பிறகு முட்டையை எடுத்து இரண்டாக வெட்டிப் பார்க்கும்போது, முட்டையின் வெள்ளைப் பகுதி முழுவதும் அழகான பிங்க் நிறத்தில் காட்சியளிக்கிறது. இது இயற்கை முறையில் சாயம் ஏற்றப்படுவதால், பீட்ரூட்டின் அத்தனை சத்துக்களும் முட்டையில் சேர்ந்து கூடுதல் சத்துள்ள உணவாக மாறுகிறது. மேலும், வழக்கமான வெள்ளை நிறத்தில் இல்லாமல், பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பதால், இது குழந்தைகளையும் ஈர்க்கும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சுவாரஸ்யமான சமையல் முறை, ஆரோக்கியத்தையும் அழகியலையும் இணைக்கும் ஒரு புதிய ட்ரெண்டாக மாறியுள்ளது.
View this post on Instagram
