SpaceX தலைவர் எலான் மஸ்க் ஒரு பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள், ‘பறக்கும் கார்’ (Flying Car) ஒன்றின் செயல்திறன் விளக்கம் (Demo) செய்து காட்டப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தச் செயல் விளக்கம், தொழில்நுட்ப வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மைல்கல்லாக அமையும் என்று அவர் உறுதியாக நம்புவதாகக் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு உலகளவில் வாகனத் துறையிலும், தொழில்நுட்ப உலகிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், இது உண்மையில் நாம் நினைப்பது போன்ற பறக்கும் கார்தானா, அல்லது வேறு ஏதேனும் அதிநவீன தொழில்நுட்பமா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறி சஸ்பென்ஸ் வைத்துள்ளார் எலான் மஸ்க். அவர் கூறுவது முற்றிலும் புதிய வடிவிலான போக்குவரத்துத் தீர்வாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மஸ்க்-ன் இந்த அறிவிப்பு, எதிர்காலத்தில் போக்குவரத்து முறையை அடியோடு மாற்றியமைக்கும் ஒரு தொடக்கமாக அமையலாம் என ஆர்வலர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.