பொதுவாக ஹைதராபாத் என்றாலே அங்குள்ள ஹதராபாத் பிரியாணி தான் பிரபலம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் இந்த மாநிலத்தில் புதிய தங்க இட்லி  ஒரு சிறப்பு ஈர்ப்பாக மக்களுக்கு அமைந்துள்ளது. அதாவது ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள கிருஷ்ணா இட்லி கஃபே தங்க முலாம் பூசப்பட்ட இட்லிகளை விற்பனை செய்கிறது.

இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், அதன் விலை ஒரு தட்டுக்கு ரூ. 1,200. அங்கு தங்க இட்லி மட்டுமல்லாமல் தங்க தோசை, குலாப் ஜாமுன் பாஜி, மலாய் கோவா குலாப் ஜாமுன் போன்ற சிறப்பு உணவுகளையும் வழங்குகிறார்கள்.