சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சன்வாரா என்ற பழங்குடியின மக்கள்  வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய பெண் பிள்ளைகள் திருணத்திற்கு விதவிதமான பாம்புகளை வரதட்சணையாக வழங்கும் விநோத வழக்கத்தை கடைபிடிக்கின்றனர். பாம்பை வரதட்சணையாக வழங்கவில்லை என்றால் சமூகத்தில் மதிப்பு இருக்காது எனவும், திருமணம் முழுமை அடையாது என்பதும் இம்மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் வீட்டார் ஒருவர் கூறுகையில், அந்த காலத்தில் எல்லாம் 60 பாம்புகளை கொடுப்போம். ஆனால் இப்பொழுது  21 பாம்புதான் கொடுக்கிறோம் என கவலையுடன் தெரிவித்தார். சாரை பாம்பு, பச்சை பாம்பு, நல்ல பாம்பு என பல வகை பாம்புகளை கொடுக்கின்றனர்.