சமூக வலைத்தளத்தில் வெளியான வைரல் வீடியோவில், ஒரு ஆசிரியர் ஒரு பெண் குழந்தையிடம், “நீ ஏன் வீட்டுப்பாடம் செய்யவில்லை?” என்று கேட்கிறார். அதற்கு அந்த குழந்தை மிகவும் அழகாக, “என் கை வலிக்கிறது, அதனால் என் அக்கா செய்கிறாள்” என்று பதிலளிக்கிறது. ஆசிரியர், “நீ வீட்டுப்பாடம் செய்யாவிட்டால் எப்படி புத்திசாலியாகுவாய்?” என்று கேட்க, குழந்தை, “இன்று விடுமுறை” என்று கூறுகிறது. ஆசிரியர், “விடுமுறை நாளைதான்” என்று சொல்ல, குழந்தை, “இல்லை, இன்று ரக்ஷாபந்தன்” என்று பிடிவாதமாகக் கூறுகிறது.
Hamara hath dard karta hai😭😭 pic.twitter.com/uiax9kOiA6
— સરપંચ શ્રી બંકો 💀 (@gujjuallrounder) September 16, 2025
இதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் சிரிக்கின்றனர். இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் @gujjuallrounder என்ற கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவுடன் “நம்ம கை வலிக்குது” என்று கேப்ஷன் எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோவை 20,000 பேர் பார்த்துள்ள நிலையில் பயனர்கள் பலரும் கருத்துகள் தெரிவித்துள்ளனர். ஒருவர், “எவ்வளவு அழகாக பேசுகிறாள்” என்றும், மற்றொருவர், “ராக்கி என்றால் ராக்கிதான்” என்றும், “மிகவும் அழகு” என்று மற்றொருவர் கூறியுள்ளார். இன்னொரு பயனர், “எவ்வளவு அழகான குழந்தை” என்றும், “வலி உண்மையாகவே இருக்கிறது” என்று வேறொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
