பாம்புகள் தனது விஷத்தன்மையால் பூமியில் மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பாம்புகள் பெரிய அபாயமாக இருக்கின்றன. ஆனால், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள ஒரு வீடியோ, இந்த நம்பிக்கையை மாற்றும் விதத்தில் உள்ளது.
அதாவது ஒரு எக்ஸ் கணக்கில் பகிரப்பட்டுள்ள 17 வினாடி வீடியோவில், ஒரு சிறிய காட்டுவிலங்கு, ஒரு பாம்பை நேரடியாக தாக்கி, அதனை உயிருடன் மென்று விழுங்கும் காட்சி பதிவாகியுள்ளது. பாம்பு தாக்க முயன்றபோது, அந்த விலங்கு அதனை தவிர்த்து, பதிலடி கொடுத்து, துரிதமாக பாம்பை தனது வாயில் பிடித்து விழுங்கத் தொடங்குகிறது. இவ்வீடியோ தற்போது வரை 1.62 இலட்சம் பார்வைகள் பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் லைக் செய்து, தங்கள் ஆச்சரிய கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
— Wildlife Uncensored (@TheeDarkCircle) September 16, 2025
ஒரு பயனர், “பயப்படும் பாம்பை, மனிதர்கள் சிற்றுண்டி சாப்பிடுவது போல் மென்று விட்டது இந்த விலங்கு,” என நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர், “இது காட்டின் உண்மையான ஹீரோ,” என புகழ்ந்துள்ளார். மேலும் சிலர், “இதற்கு பாம்புகள் ‘ஃபாஸ்ட் ஃபுட்’ மாதிரி!” என குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோவில் காணப்படும் விலங்கின் அடையாளம் குறித்து பலர் ஆர்வம் காட்டியுள்ளனர். சிலர், இது ஒலிங்கிட்டோ எனப்படும் ஒரு அபூர்வ விலங்கு என்றும், 2013-இல் கண்டுபிடிக்கப்பட்ட புதிய இனமாகவும், கொலம்பியா மற்றும் மேற்கு ஈக்வடாரின் மேகக் காடுகளில் காணப்படும் வகையாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் பாம்புகளுக்கே பயமின்றி நேரடியாக தாக்கும் இந்த விலங்கு, காட்டுச்சூழலில் அதிசயத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
