அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில் வசித்து வந்த ஜெப்ரி பெர்குசன் என்பவர் நீதிபதியாக இருந்தார். இவருக்கு ஷெரில் என்ற மனைவி இருந்தார். கடந்த 2023 ஆம் வருடம் குடும்பப் பிரச்சனை காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த ஜெப்ரி வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து தன் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டார். அதனைத்தொடர்ந்து ஜெப்ரி பெர்குசனை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அதுமட்டுமின்றி அவரது வீட்டில் இருந்த 50 துப்பாக்கிகள், வெடி மருந்து ஆகியவை கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஜெப்ரி பெர்குசன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஆகவே அவருக்கு 35 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.