இணையத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களை சிரிப்பில் மூழ்கடிக்கிறது. இந்த வீடியோவில், ஒரு இளம்பெண் ஒரு இளைஞனுடன் பாலிவுட் பாடலுக்கு இடுப்பை ஆட்டி உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருக்கிறார். பின்னர் திடீரென அந்தப் பெண்ணின் தாய் அங்கு வந்து, மகளிடம் கடும் கோபத்தில் தலைமுடியை இழுத்து சினிமா பாணியில் அவரை அடிக்கத் தொடங்குகிறார்.
அந்தக் காட்சியைக் கண்டு அதிர்ந்துபோன அந்த இளைஞன் அங்கிருந்து உடனடியாக ஓடிவிடுகிறார். இது மட்டுமல்லாமல், பின்னணியில் ஒலிக்கும் பாடலும், அருகில் இருந்தவர்களின் சிரிப்பும் இந்த வீடியோவை மேலும் வேடிக்கையாக மாற்றியுள்ளன.
View this post on Instagram
இந்த வீடியோ @naresh_kumar_chadha என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளதுடன், இது இணையத்தில் வைரலாகி பல லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “அம்மா வந்துட்டாரா?”, “அப்படி ஒரு தாய்க்கு சல்யூட்!” போன்ற கருத்துகளை பதிவிட்டு உள்ளனர். சிலர் இது நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்ட ரீல் என கருதினாலும், சிலர் இதில் இருந்த ஒரு பாடம் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
“ஒரு பெண் மகளை எல்லோருக்கும் முன்னால் அடிப்பது சரியானதா?” என கேள்வி எழுப்புகின்றனர். ஒரு நெட்டிசன், “அம்மா ஒரு தனியார் இடத்தில் மகளிடம் பேசியிருக்கலாம்; இது அவமானமாக இருக்கு” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இன்னொருவர், “இந்த மாதிரியான சம்பவங்களை நாம் வெறும் வேடிக்கை காட்சியாக பார்க்கக் கூடாது; பெற்றோர் மற்றும் இளைஞர்கள் இருவருமே புரிந்துணர்வு கொண்டிருக்க வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்களில் இந்த வீடியோ மீது தொடர்ந்தும் கலகலப்பான விவாதம் நடைபெற்று வருகிறது.
