தெலங்கானா மாநிலம் ஜக்தியாலாவில், மனைவியின் கள்ளக்காதலரைக் கணவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்த கங்காதர் என்பவர், தனது மனைவிக்கு விஸ்வநாத் என்பவருடன் தொடர்பு இருப்பதை அறிந்து ஊருக்கு வந்துள்ளார்.
பலமுறை எச்சரித்தும், சமரசம் செய்ய முயன்றும் மனைவி கேட்காததால் ஆத்திரமடைந்த கங்காதர், தனது நண்பர்களுடன் சேர்ந்து மனைவியின் கண்முன்னே விஸ்வநாத்தை வழிமறித்துக் கட்டையால் அடித்துக் கொன்றுள்ளார்.
