பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் கலந்துகொள்ளும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக வருகை தந்த கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு, அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து தான் வழக்கமாகச் செய்யும் வைரல் செய்கையைச் செய்தபடி உற்சாகமாக நடந்து சென்றார்.
‘எங்கேயும் எப்போதும்’ பாணியில் அவர் செய்த அந்தச் செயல், அங்கிருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு, பலரையும் புன்னகைக்க வைத்தது.
அரசியல் மேடைகளில் எப்போதும் கலகலப்பாக இருக்கும் வி.எஸ்.பாபுவின் இந்தத் துள்ளலான நடை மற்றும் பாடி லாங்குவேஜ், தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பேசப்பட்டு வருகிறது.
