திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சியின் வளர்ச்சி மற்றும் தேர்தல் சாதனைகள் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: “தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் பேரியக்கம் நாம் தமிழர் கட்சி மட்டுமே.
உலக அரசியல் வரலாற்றில் என்னைப் போன்ற தோல்வி கண்ட மகன் இல்லை. 2014 ஆம் ஆண்டு நான் தேர்தல் களத்தில் குதித்தேன். அப்போது 1.1 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்றேன். அந்த அளவிலான தோல்வியை சந்தித்த எந்த அரசியல் இயக்கமும் உயிரோடு நிலைத்திருக்கவில்லை. ஆனால் நாங்கள் பின்னடைந்துவிடாமல் மீண்டும் எழுந்தோம். அடுத்தடுத்த தேர்தல்களில் 5 விழுக்காடு, பின்னர் 7 முதல் 8 விழுக்காடு வரை வாக்குகளைப் பெற்றோம். தற்போது 8.5 விழுக்காடு வாக்குகள் பெற்று, தனித்து நின்று மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளோம்,” என்று சீமான் தெரிவித்தார். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக ஏற்கனவே சீமான் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
