தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது மற்றும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியின் இணைப்பது உள்ளிட்ட பணிகளிலும் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது கிருஷ்ணகிரியில் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர். இந்த விழா பர்கூரில் நடைபெற்ற நிலையில் திமுக எம்எல்ஏ மதியழகன் அவர்களை சால்வை அணிவித்து தங்கள் கட்சிக்கு வரவேற்றார். மேலும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியில் திமுக ஈடுபட்டுள்ளது.