சீனாவில் உள்ள மேற்கு சிஞ்சியாங் பகுதியில் இருந்து ஜம்மு காஷ்மீர் வழியாக கல்வான் நதி பாய்கிறது. இங்குள்ள லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இந்நிலையில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் பொழுதுபோக்குக்காக ஏதாவது ஒரு விஷயங்களை செய்வார்கள்.

அந்த வகையில் தற்போது கல்வான் பள்ளத்தாக்கில் திடல் சரி செய்து கிரிக்கெட் விளையாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் லடாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு ஹாக்கி மற்றும் பனிச்சறுக்கு போன்ற போட்டிகளும் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.