திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை அச்சிட்டு, “உருட்டு கடை அல்வா” என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) விநியோகித்தது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக பரவி, அரசியல் வட்டாரங்களில் கலகலப்பை கிளப்பியது.

இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளார். “இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸை கூட்டுவதற்காகவே எடப்பாடி பழனிசாமி இப்படிப் புதிய அரசியல் நாடகங்களை நடத்துகிறார்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“>

 

அவர் மேலும் கூறியதாவது, “இன்று அல்வா பாக்கெட்டைக் காட்டி ‘உருட்டு கடை அல்வா’ என்று கதைவிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அதிமுக கட்சி அவரின் கைக்கு எப்படி வந்தது என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதிமுகவை ஒரு திருட்டுக் கடையாக மாற்றியவர், அனைவரிடமிருந்தும் அதிகாரத்தைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமிதான்,” என்று கடுமையாக தாக்கியுள்ளார். இந்தக் கருத்துக்கள், திமுக – அதிமுக இடையிலான அரசியல் களத்தில் புதிய சர்ச்சையை தூண்டியுள்ளன..