கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெகவின் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பல உயிரிழப்புகள் நிகழ்ந்தது தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த துயரச் சம்பவத்தின் பின்னணியில், நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவருமான விஜய், தனது தேர்தல் பரப்புரைகளை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தீபாவளிக்குப் பிறகு நேரில் சென்று சந்திக்க விஜய் முடிவெடுத்துள்ளார்.

இதற்கிடையே, தவெகக் கட்சி கட்டமைப்பை மேம்படுத்தும் பணியில் தீவிரமாக உள்ள விஜய், பரப்புரை பயணத்தை மீண்டும் தொடங்குவதற்கான முன்பணிகளை மேற்கொள்ள நிர்வாகிகளுக்கு ஆலோசனையுடன் கூடிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். மாவட்டத்திலிருந்து மாநிலம் வரை நிர்வாக பொறுப்புகள் விரைவாக நியமிக்கப்பட வேண்டும் எனவும், அதற்கான திட்டமிடல்களில் தாமதம் ஏற்படக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன