மகாராஷ்டிர மாநிலம் நந்த்கான் கிராமத்தில், அங்கன்வாடி ஊழியர் ஒருவர் சிறுமி ஒருவரை மிகக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. அரசு நடத்தும் அந்த அங்கன்வாடி மையத்திற்குள், அழுதுகொண்டிருக்கும் அந்தச் சிறுமியைப் படுக்கவைத்து, அவளது நெஞ்சில் காலை வைத்தும், காலால் எட்டி உதைத்தும் அந்த ஊழியர் சித்திரவதை செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, நவிமும்பை போலீஸாருக்குக் கடுமையான அழுத்தம் ஏற்பட்டுள்ளதோடு, சம்பந்தப்பட்ட ஊழியர் மீது உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் திரண்டு போராடி வருகின்றனர்.
View this post on Instagram
இந்த நிலையில் மகராஷ்டிரா நவிநிர்மான் சேனாவை சேர்ந்த சில பெண்கள் சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மையத்திற்கு சென்று குழந்தையை காலால் எட்டி உதைத்த ஊழியரை தோப்பு காரணம் போட வைத்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அந்த ஊழியரை பணியிலிருந்து தூக்க வேண்டும் எனவும் குழந்தைகளிடம் பொறுமை மற்றும் அன்பை காட்டுபவர்களே இது போன்ற வேலைகளுக்கு அமர்த்த வேண்டும் எனவும் சமூக வலைதளத்தில் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.
