2020 ஜூன் 15-ஆம் தேதி, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய வீரர்களும் தீவிரமாக பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதல் இரு நாடுகளுக்கும் இடையே உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. ஆனால், அண்மையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்றதன் மூலம் இரு நாட்டு உறவுகள் சற்று மேம்பட்டன.
இந்த சம்பவம் இந்தியா-சீன உறவுகளில் பதற்றத்தைக் குறைக்க உதவியது என்று பலரும் கருதினர். இந்நிலையில், அமெரிக்காவின் ஆளும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டென்னசி மாகாண செனட்டர் பில் ஹாகெர்டி, கல்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். “சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நீண்ட காலமாக மனக்கசப்புகளும் அவநம்பிக்கையும் உள்ளன.
"China used electromagnetic weapons to literally melt Indian soldiers," claims US Senator Bill Hagerty in a bizarre statement pic.twitter.com/ZiYk7BcqTe
— Shashank Mattoo (@MattooShashank) September 11, 2025
சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சர்ச்சைக்குரிய எல்லையில் சீனாவும் இந்தியாவும் சண்டையிட்டபோது, சீனா இந்திய வீரர்களை உயிருடன் உருக்க மிகவும் ஆபத்தான மின்காந்த ஆயுதத்தைப் பயன்படுத்தியது” என்று அவர் தெரிவித்தார். கல்வான் பள்ளத்தாக்கு மோதலை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அவரது கூற்று 2020-ல் நடந்த இந்த மோதலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று மறைமுகமாகக் கூறினார். இந்த குற்றச்சாட்டு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
