தொழில்நுட்பமும் கலாச்சார பாரம்பரியமும் ஒருங்கிணைந்த தருணங்களில், சீனாவின் கண்டுபிடிப்புகள் உலக மக்களையே ஆச்சரியப்படுத்துகின்றன. சமீபத்தில், சீனாவின் கன்சு மாகாணத்திலுள்ள டன்ஹுவாங் நகரில் கட்டப்பட்டுள்ள ஒரு “பொது கழிப்பறை” சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெறும் சேவைக்காக பார்வையாளர்களை கவரும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த இடம், கலாச்சார மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது.

யுனெஸ்கோ மரபு பட்டியலில் இடம் பெற்றுள்ள மொகாவோ குகைகள் புகழ்பெற்ற பௌத்த சுவரோவியங்களுக்காக பிரசித்தம். அதே பாணியில், “டன்ஹுவாங் தூய ரியல்ம் பொது கலாச்சார இடம்” என அழைக்கப்படும் இந்த புதிய கழிப்பறை, பாரம்பரிய சுவரோவியங்களும், நவீன கட்டிடக்கலை அமைப்புகளும் சேர்ந்து கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இரு மாடிகள் கொண்ட இந்த கட்டிடம், ஒரு சுற்றுலா நிலையத்திற்குச் சமமான வசதிகளுடன் காணப்படுகிறது. அதன் வெளிப்புறம் வெளிப்படையான கண்ணாடி சுவர்களுடன், ஒரு மாடர்ன் கட்டிட வடிவமைப்பைக் கொண்டுள்ளது. உள்ளே புகுந்தவுடன், அது ஒரு பொது கழிப்பறை என நம்ப முடியாத அளவுக்கு அழகாகவும் அழுத்தமிக்க வடிவத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by China Exploring (@china__exploring)

இந்த கழிப்பறையில், தாய் மற்றும் குழந்தை அறை உள்ளது, இதில் பாக்டீரியா எதிர்ப்பு நர்சிங் டேபிள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு இருக்கைகள், சுய சுத்தம் செய்யும் உபகரணங்கள் உள்ளது.

மற்ற வசதிகள்: உட்காரும் பகுதி, பான விநியோகிப்பான் மூப்பினரும், மாற்றுத்திறனாளிகளும் எளிதாக அணுகக்கூடிய அமைப்பு உள்ளது. இவை அனைத்தும் பயணிகளுக்கு ஒரு மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஆகஸ்ட் 16 அன்று பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட இந்த கழிப்பறை, தற்போது டன்ஹுவாங் நகரத்தில் முக்கியமான சுற்றுலா ஈர்ப்பாக மாறியுள்ளது. பலர் பாரம்பரிய ஹன்ஃபு உடையை அணிந்து இந்த இடத்துக்கு வந்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். வீடியோவில், இதன் வெளிப்புற அமைப்பும், அகப்புற சீரமைப்பும், ஒரு உணவகம் அல்லது கலைக்கூடத்தை நினைவூட்டும் விதமாக உள்ளது.

மேலும் இந்த வீடியோவை பார்த்த  பலரும், “கழிப்பறை என்றாலும் கலாச்சாரம் தவிர்க்கப்படக்கூடாது” எனச் சொல்லும் சீனாவின் அணுகுமுறையை பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களில் இதற்கான பாராட்டுகளும் பகிர்வுகளும் தொடர்கின்றன.