சென்னை எண்ணூரில் உள்ள நேதாஜி நகரில் சுதர்சன் குமார் (55) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 30 வருடங்களாக தனக்கு சொந்தமான இடத்தில் கிரிஜா கிளினிக் என்ற பெயரில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவர் மீது சிலருக்கு சந்தேகம் வந்த நிலையில் நேற்று இது தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி இணை இயக்குனர் டாக்டர் விஸ்வநாதன் தலைமையில் ஒரு குழு கிரிஜா கிளினிக்குக்கு  சோதனை செய்தபோது அங்கு சுதர்சன் ஒரு நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர். அதன் பிறகு அவரிடம் இருந்த மருத்துவ சான்றிதழ்களை சரி பார்க்க வேண்டும் என்று கேட்டபோது அவர் மருத்துவம் படித்தற்கான ஒரு சான்று கூட இல்லை.

சுதர்சன் குமார் யோகா பட்டப்படிப்பு முடித்துவிட்டு மருத்துவம் படித்ததாக கூறிய அந்த சான்றிதழை வைத்து போலியாக மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள நிலையில் அந்த பகுதி மக்கள் சுதர்சன் குமார் யார் என்று தெரியாமல் 30 வருடங்களாக சிகிச்சை பெற்றதை நினைத்து மிகுந்த அச்சத்தில் இருப்பதோடு பணத்தை விரயமாக அவருக்கு கொடுத்து விட்டோமே என்று நினைத்து கவலையிலும் இருக்கிறார்கள். மேலும் சுதர்சன் குமாரை கைது செய்ததோடு அவரிடம் இருந்த மருந்து, மாத்திரை, குளுக்கோஸ் போன்றவைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.