சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு நபர் தனது செல்போனில் உள்ள ஒரு செயலியைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை ரிமோட் மூலம் கட்டுப்படுத்துவது போலக் காட்டப்பட்டுள்ளது.

இது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான ஒன்று என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். அந்த வீடியோவில் காட்டப்படும் செயலி, மின்னணு வாகனங்களின் (இ-ரிக்‌ஷா) பேட்டரியை நிர்வகிக்கப் பயன்படும் ஒரு செயலி மட்டுமே.

ஏடிஎம் இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பான வங்கி நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இதுபோன்ற சாதாரண செயலிகள் மூலம் அவற்றை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று நிபுணர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.

ஏடிஎம் இயந்திரங்கள் மென்பொருள் புதுப்பிப்பு அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தானாகவே ரீபூட் ஆவது வழக்கம். அந்த வீடியோவில் உள்ள நபர் ஏடிஎம்-ஐக் கட்டுப்படுத்துவது போலத் தெரிவது வெறும் தற்செயலான நிகழ்வுதான். ஏற்கனவே சில மின்னணு வாகனச் செயலிகள் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்ததால், மக்கள் மத்தியில் நிலவும் பயத்தைப் பயன்படுத்தி இந்த வதந்தி பரப்பப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Alimuddin Ansari (@indiatrend.in)

“>

உங்கள் வங்கிப் பணம் முற்றிலும் பாதுகாப்பாகவே உள்ளது; எனவே, ஆதாரமற்ற வீடியோக்களை நம்பி யாரும் அச்சப்பட வேண்டாம். தெரியாத செயலிகளைத் தரவிறக்கம் செய்வதைத் தவிர்த்துவிட்டு, வங்கி தொடர்பான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டுமே அணுகுமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.