மெக்ஸிகோவின் ஓக்ஸாகா மாகாணத்தில் உள்ள சான் பெட்ரோ ஹுயுமெலுலா என்ற கிராமத்தில், ஆண்டுதோறும் ஒரு விசித்திரமான மற்றும் பழமையான திருமணம் நடைபெறுகிறது. இந்த ஊரின் மேயர், ஒரு பெண் முதலைக்கு மணமகன் போல பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொள்கிறார்.

திருமணத்தின் போது அந்த முதலைக்கு வெள்ளை நிற திருமண ஆடை அணிவிக்கப்பட்டு, மணப்பெண் போல அலங்கரிக்கப்படுகிறது. பாதுகாப்பு கருதி முதலையின் வாய் கட்டப்பட்டிருக்கும் நிலையில், மேயர் அந்த முதலைக்கு முத்தமிட்டு சடங்குகளை நிறைவு செய்கிறார்.

இது வெறும் கேலிக்கூத்து அல்ல, தங்கள் ஊருக்கு நல்ல மழை, வளமான விளைச்சல் மற்றும் மீனவர்களுக்குச் சிறந்த மீன்பிடிப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் 230 ஆண்டுகள் பழமையான பழங்குடியின பாரம்பரியமாகும்.

இந்த விசித்திரமான திருமணத்திற்குப் பின்னால் ஒரு அழகான நாட்டுப்புறக் கதை உள்ளது. பண்டைய காலத்தைச் சேர்ந்த இரு பழங்குடியினத் தலைவர்களிடையே நிலவிய பகையை முடிவுக்குக் கொண்டுவர, ஒரு ராஜா ஒரு இளவரசியை மணம் முடித்ததாகக் கூறப்படுகிறது.

“>

 

அந்த ராஜாவின் அடையாளமாக மேயரும், அந்த இளவரசியின் அடையாளமாக இந்த முதலை பெண் முதலையும் கருதப்படுகின்றன. எனவே, இந்தத் திருமணம் இரு சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் அமைதியின் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு, அந்த முதலைக்கு மேளதாளங்களுடன் ஊர்வலம் நடத்தப்பட்டு, ஊர் மக்கள் அனைவரும் மகிழ்ந்து இந்தத் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள்.