தென் கொரியாவில் உள்ள ஒரு காலணி திருத்தும் கடை தற்போது சமூக வலைதளங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
பார்ப்பதற்கு அதிநவீன சொகுசு ஹோட்டல் அறை போலத் தோன்றும் இந்தக் கடையின் உரிமையாளர், தனது வேலைக்கு ஆடி காரில் வந்து செல்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏர் கண்டிஷனிங் வசதி, கண்ணாடிச் சுவர்கள் மற்றும் நவீன இயந்திரங்களுடன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கடையில், காலணிகள் பழுதுபார்க்கும் முறை மிகவும் தொழில்முறை சார்ந்ததாக உள்ளது.
இந்தியாவில் ஒரு தையலுக்கு 20 முதல் 50 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், அங்கு ஒரு சிறிய தையலுக்கு சுமார் 400 முதல் 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விலை அதிகமாக இருந்தாலும், அங்குள்ள தரம் மற்றும் சுத்தத்தைப் பாராட்டி வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று தங்கள் காலணிகளைச் சரிசெய்து கொள்கின்றனர்.
இது போன்ற சாதாரண தொழில்களையும் மிகவும் கண்ணியமாகவும், தொழில்முறை தரத்துடனும் செய்வதால், அந்த நாட்டிலுள்ள அனைத்துத் தொழில்களுக்கும் உரிய மதிப்பும், அதற்கேற்ற வருமானமும் கிடைப்பதாகப் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
எந்தவொரு வேலையையும் தரமாகச் செய்தால், அதுவே உயர்ந்த தொழிலாக மாறும் என்பதற்கு இந்தக் கடை ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
