தமிழகத்தில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இந்த நிலையில் மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்கான பூத் சிலிப் இதுவரை கிடைக்காதவர்கள் https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று உங்களது வாக்காளர் அடையாள அட்டை என்னை பதிவு செய்ய வேண்டும். அதன் மூலம் உங்களது வாக்குச்சாவடி விவரம், வரிசை எண், பாக எண் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.