ஈரான் நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், மக்கள் வாழ்வதற்கே வழியின்றி தவித்து வருகின்றனர். இந்த விலைவாசி உயர்வுக்கும், அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சிக்கும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த டிசம்பர் 28 முதல் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை ஒடுக்க அரசு தரப்பில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகளால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.

தற்போது வரை இந்தப் போராட்டத்தில் 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. ஆனால், மனித உரிமை அமைப்புகள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் தரப்பிலிருந்து வரும் செய்திகள் இன்னும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளன. சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வன்முறையில் உயிரிழந்திருக்கலாம் என்றும், இணைய சேவை முடக்கப்பட்டிருப்பதால் உண்மை நிலவரம் இன்னும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.