மத்திய கிழக்கில் ஏற்கனவே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் இப்போது பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.
உலக நாடுகளின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் முக்கிய வழித்தடமான ஹோமுஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக, பாகிஸ்தான் கொடியுடன் வந்த ஒரு பிரம்மாண்ட எண்ணெய் கப்பலை ஈரான் ராணுவம் தாக்கி அழித்துள்ளது.
முறையான அனுமதி இன்றி இந்த எல்லைக்குள் நுழைய முயன்ற அந்த கப்பலுக்கு, ஈரான் கடற்படை பலமுறை எச்சரிக்கை விடுத்தும் கப்பல் நிறுத்தப்படாததால், துல்லியமான ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அதைத் தகர்த்துள்ளதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.
“எங்கள் எச்சரிக்கையை யாராவது லேசாக எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு இதுதான் கதி” என்று ஈரான் ராணுவம் (IRGC) மிரட்டல் விடுத்துள்ளது.
தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருப்பதால், இந்த வழித்தடத்தில் தனது கட்டுப்பாட்டை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கப்பல்கள் உள்ளிட்ட ‘நட்பு நாடுகளின்’ கப்பல்களுக்கு மட்டுமே இந்த வழியில் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்றும், மற்றவர்கள் அத்துமீறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் கப்பல் தகர்க்கப்பட்ட இந்தச் சம்பவம், உலகளவில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
