ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் எடுக்கும் நடைமுறை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இதனை இணையதளம் மூலமாக பெறுவதற்கான பதிவும் தொடங்கியுள்ளது. மே 7 நாளை முதல் ஜூன் 30-ம் தேதி வரை ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டது. http://epass.tnega.org என்ற இணையதளத்தின் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். பேருந்துகளில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெற வேண்டிய தேவை இல்லை.