நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மே 7-ஜூன் 30 வரை ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, சுற்றுலா செல்வோர் இந்த இணையதளத்தில் நாளை காலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். TNEGA செயலியிலும் இ-பாஸ் பெறலாம்.