தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மத்திய பாஜக அரசை விமர்சிப்பதைத் தவிர்த்து வருவதாகவும், மத்திய அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வருகை தந்தபோது முதலமைச்சர் விஜய் நேரில் சென்று வரவேற்பளித்ததும், அவருக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட மசாலாப் பொதியை பரிசாக வழங்கியதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது.
சட்டமன்றப் பேரவையில்கூட பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா குறித்த விமர்சனங்களை நீக்கக் கோரி தவெக அமைச்சர்கள் குரல் கொடுத்த நிகழ்வுகள், தேசிய அரசியலில் தவெக மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்க விரும்புவதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.
இந்தச் சூழலில், தவெக மீது பாஜக மறைமுகமான நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த விவகாரத்தை டெல்லி மேலிடம் கையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், தவெக தரப்பு மீது எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கியதாகக் கூறப்படும் முறைகேடு புகார்களை தீவிரப்படுத்தவும் காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாகவே, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீரென ஆளுநர் ஆர்.என். ஆா்லேங்கரை நேரில் சந்தித்து, தவெக மீது குதிரை பேரப் புகாரை அளித்துள்ளதாகக் கூறப்படும் தகவல் அரசியல் களத்தில் தீயாய் பரவி வருகிறது.
அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள இந்தச் சர்ச்சையின் பின்னணியில் மத்திய உளவுத்துறை தொலைபேசி உரையாடல்களைத் திரட்டி வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிடிவி தினகரனின் இந்த அதிகாரப்பூர்வப் புகார் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டால், அது முதலமைச்சர் விஜய்க்கு கடுமையான சிக்கல்களை உருவாக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக அரசு மீதான குதிரை பேர குற்றச்சாட்டை கையில் எடுக்க டெல்லி மேலிடம் திட்டம்: டிடிவி தினகரன் அளித்த புகாரால் முதல்வர் விஜய்க்கு செக்
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த நாள் முதலே முதல்வர் விஜய், தவெக அமைச்சர்கள் யாரும் பாஜகவை விமர்சிப்பதில்லை. மத்திய அரசுடன் இணக்கமான போக்கை… pic.twitter.com/LQCUcC3O5k
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) September 1, 2026
“>
நட்பு பாராட்டுவது போலக் காட்டிக் கொண்டே மத்திய அரசு தவெக மீது முடக்க நடவடிக்கைகளைக் கையிலெடுக்கத் தொடங்கியுள்ளதாக வெளியாகும் இந்தச் செய்திகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
