மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானுக்கு ஆதரவாக ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் போரில் குதித்துள்ளதால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கடும் பதற்றமடைந்துள்ளன.

ஈரானிடமிருந்து ராணுவ மற்றும் நிதி உதவிகளைப் பெற்று வரும் ஹூதிகள், செங்கடல் வழியாக ஈரானுக்கு எதிராக எந்த நாடு செயல்பட்டாலும் நேரடியாகத் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளனர்.

ஏற்கனவே ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஹூதிகளின் இந்த நுழைவு நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

ஒருவேளை ஹூதி கிளர்ச்சியாளர்கள் போரில் தீவிரமாக இறங்கினால், அவர்கள் செங்கடலில் உள்ள பாப்-எல்-மண்டேப் ஜலசந்தியை மூடிவிடக்கூடும். இது நடந்தால் உலக வர்த்தகத்தில் பாதியளவு முடங்கும் அபாயம் உள்ளது, குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இதனால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும்.

ஏமனின் பீர்ஷேபா நகரில் ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்துள்ளதை ஈரானிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அரேபிய தீபகற்பத்தில் ஒரு புதிய போர்முனை திறக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த இரு முக்கிய கடல்வழிப் பாதைகளும் மூடப்பட்டால், உலகப் பொருளாதாரம் பெரும் குழப்பத்திலும் வீழ்ச்சியிலும் சிக்க வாய்ப்புள்ளது.