திருச்சியில் இருந்து மதுரை வரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சமத்துவ நடைபயணத்தை’ முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை தொடங்கி வைக்கிறார்.

நாளை (ஜனவரி 2) காலை 9 மணி அளவில், திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை மைதானத்தில் இந்த நடைபயணத் தொடக்க விழா நடைபெறுகிறது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நாளை காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு விரைந்து வந்து, வைகோவின் இந்த நீண்ட தூர சமத்துவப் பயணத்தை கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிகழ்வை முடித்த கையோடு அவர் மீண்டும் சென்னை திரும்புகிறார். திமுக – மதிமுக இடையிலான ஆழமான நட்பையும், வரப்போகும் தேர்தலுக்கான ஒற்றுமையையும் பறைசாற்றும் விதமாக இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.