பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 சீசன் தொடங்கி நாள் முதலே பல வினோதமான குளறுபடிகளால் கிரிக்கெட் ரசிகர்களின் கேலிக்கு உள்ளாகி வருகிறது. முதலில் ஜெர்சியின் சாயம் போய் பந்து பிங்க் கலராக மாறியது, தற்போது லாகூர் கலாண்டர்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது டாஸ் போடப்படும் இடத்தில் இரு அணிகளின் மஸ்காட்களும் (Mascots) ஒருவருக்கொருவர் மல்லுக்கட்டிச் சண்டை போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இதைப் பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், “என்னடா இது வேடிக்கை மனிதர்களின் ஜத்திரையா?” என்பது போன்ற ஒரு பார்வையுடன் திகைத்து நின்றது பார்ப்பவர்களைச் சிரிக்க வைத்துள்ளது.
The fight between the Karachi Kings and Lahore Qalandars mascots at the toss. 🤣pic.twitter.com/orFIL02tVz
— Sheri. (@CallMeSheri1_) April 23, 2026
இந்தத் தேவையில்லாத டிராமா குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை நெட்டிசன்கள் கடுமையாகக் கிண்டல் செய்து வருகின்றனர். போட்டியின் ஒரு கட்டத்தில் வார்னர் தனது அதிரடியைக் காட்டினாலும், களத்தில் நடந்த இந்த மஸ்காட் கூத்து தான் தற்போது கிரிக்கெட் உலகில் ‘டாப் ட்ரெண்டிங்’ செய்தியாக உள்ளது. கிரிக்கெட்டை விட இதுபோன்ற கோமாளித்தனங்களுக்கே பிஎஸ்எல் முக்கியத்துவம் கொடுப்பதாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் விளாசி வருகின்றனர்.
