ஐபிஎல் 2026 சீசனின் மிகப்பெரிய மோதலான மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான போட்டியில், மும்பை வீரர் மிட்செல் சாண்ட்னர் வீசிய ஒரு பந்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாகத் தனது சுழற்பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களைக் திணறடிக்கும் சாண்ட்னர், சிஎஸ்கே வீரர் ஷிவம் துபே களமிறங்கிய முதல் பந்திலேயே ஒரு மின்னல் வேகப் பவுன்சரை வீசி அதிர வைத்தார். இதைப் பார்த்த ரசிகர்கள், குணால் பாண்டியா தான் இதுபோல வேகமான பவுன்சர்களை வீசி பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சி கொடுப்பார், இப்போது சாண்ட்னரும் அவரையே மிஞ்சிவிட்டார் என இணையத்தில் மீம்ஸ்களைக் குவித்து வருகின்றனர்.

​காயத்தால் இந்தப் போட்டியில் விளையாட முடியாமல் டக்-அவுட்டில் அமர்ந்திருந்த ரோகித் சர்மா கூட, சாண்ட்னரின் இந்த வித்தியாசமான முயற்சியைக் கண்டு உற்சாகமாகச் சிரித்து ரசித்தார். சரத்பிராஸ் கானின் விக்கெட்டை வீழ்த்திய கையோடு, துபேவை வரவேற்க அவர் போட்ட அந்தப் பவுன்சர் தற்போது எக்ஸ் (X) தளத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. சிஎஸ்கே அணி 8 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தாலும், சாண்ட்னரின் இந்தத் திடீர் வியூகம் மும்பை ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.