தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் நடந்து முடிந்த பொதுத் தேர்வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் சார்பில் சமீபத்தில் கல்வி விருது நிகழ்வு நடைபெற்றது. அதில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஜயின் கல்வி விருது நிகழ்வு குறித்து பேசிய நடிகர் சத்தியராஜ், இளைய தலைமுறையினரின் நம்பிக்கை நட்சத்திரமாக தளபதி விஜய் உள்ளார் என்று கருத்து தெரிவித்தார். மேலும் மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக நடிகர் விஜய் செய்தது மிகவும் நல்ல விஷயம். அம்பேத்கர், பெரியார் மற்றும் காமராஜரை படிக்க வேண்டும் என்று விஜய் சொன்னது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். நடிகர் விஜய் இளைய தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை என்று சத்தியராஜ் கூறினார்.