டைரக்டர் ராஜமௌலி இந்திய சினிமா மட்டுமல்லாமல் உலகளவில் பாப்புலரான இயக்குனர் ஆவார். இவர் இயக்கிய RRR படம் மிகப் பெரிய அளவில் ஹிட்டான நிலையில், அதில் வரும் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருதும் கிடைத்தது. ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் திரையுலகில் கதாசிரியராக இருந்து வருகிறார். பாகுபலி, RRR ஆகிய படங்களுக்கு கதை எழுதியது அவர் தான். ராஜமௌலி குடும்பம் தொடக்கத்தில் பணக்கார குடும்பமாகதான் இருந்தது.

அதாவது, 360 ஏக்கர் சொத்து இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் ராஜமௌலிக்கு சுமார் 10 வயது இருக்கும் போது மொத்த சொத்தையும் விற்றுவிட்டார்களாம். இதையடுத்து மொத்த குடும்பமும் சென்னைக்கு வந்து ஒரு பெட்ரூம் அபார்ட்மெண்டில் வாடகைக்கு தங்கியிருக்கின்றனர். மொத்தம் 13 பேர் வீட்டில் இருந்தபோதிலும், ராஜமௌலியின் அண்ணன் மட்டுமே சம்பாதித்து வந்தாராம்.

அந்த சம்பளத்தை வைத்து வாடகை உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் பார்க்கவேண்டிய நிலை இருந்தது. 22 வயது வரை ராஜமௌலி எந்த வேலைக்கும் போகாமல் வீட்டில் இருந்தாராம். எதாவது செய் என அப்பா தொடர்ந்து கூறியதால் தான் ராஜமௌலி வாழ்க்கையை சீரியசாக எடுத்துக்கொண்டு பணிப்புரிய தொடங்கி உள்ளார்.