தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் கரூர் எம்.பி ஜோதிமணி அவர்கள் அளித்துள்ள பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவெக தலைவர் விஜய் குறித்துப் பேசிய அவர், “விஜய்க்கு தமிழக இளைஞர்களிடையே மிகப்பெரிய அளவில் ஆதரவு உள்ளது; வரவிருக்கும் தேர்தலில் அவர் நிச்சயமாக இரண்டாவது இடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது” என மிகத் துணிச்சலாகத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஏற்கனவே திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சிறு சிறு சலசலப்புகள் நிலவி வரும் நிலையில், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த எம்.பி ஒருவரே விஜய்யின் வருகையை அங்கீகரிக்கும் வகையில் பேசியிருப்பது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களின் எழுச்சி விஜய்க்குச் சாதகமாக அமையும் என ஜோதிமணி கூறியிருப்பது, மற்ற பிரதான கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது.
