தமிழக அரசியலில் இதுவரை எந்தக் கட்சியும் செய்யாத ஒரு மாபெரும் டிஜிட்டல் புரட்சியைத் தமிழக வெற்றிக் கழகத்தினர் (TVK) மாதவரம் தொகுதியில் கையில் எடுத்துள்ளனர். “மக்களைத் தேடி நாங்கள் வருவோம்” என்ற வாக்குறுதிக்கு ஏற்ப, வீதிக்கு வீதி சென்று கியூ-ஆர் கோடு (QR Code) மற்றும் பிரத்யேக ஆப் மூலம் மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறியும் தவெக தொண்டர்களின் வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது.

​ஆட்சிக்கு வரும் முன்னாலேயே மக்களின் பிரச்சனைகளைத் தேடிச் சென்று தீர்வு காணத் துடிக்கும் ஒரே கட்சி இதுதான் எனத் தொண்டர்கள் கெத்தாக முழங்குகின்றனர். வீடு வீடாகச் சென்று நோட்டீஸ் வழங்குவதுடன், ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் தளபதி விஜய்யின் புகைப்படத்தை ஒட்டி ஒரு புதிய அரசியல் எழுச்சியையே உருவாக்கி வருகின்றனர்.


“வெறும் வாக்குறுதிகளை மட்டும் அள்ளி வீச மாட்டோம், உங்கள் குறைகளைத் தீர்க்கக் களத்தில் நிற்போம்” என அவர்கள் முன்னெடுக்கும் இந்த நவீனப் பிரச்சார முறை மாதவரம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.