இரும்பு நுரையீரல் உதவியுடன் 70 ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழ்ந்து வந்த பால் அலெக்சாண்டர் (78) காலமானார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்த அவர் 6 வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டதால் கழுத்துக்கு கீழ்ப்பகுதி முழுமையாக செயலிழந்தது. எப்படியாவது மற்றவர்களை போல் வாழ வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் போராடி வந்த நிலையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.