வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிலோ வெள்ளி ₹80,000ஆக உயர்ந்துள்ளது. சமீப நாட்களாக தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு ஆபரணங்கள் மீது அதிகரித்துள்ள முதலீடுகளே காரணம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று ஒரு கிலோ ₹78,500க்கு விற்பனையான வெள்ளி, இன்று ₹80,000ஆக உயர்ந்துள்ளது. இதேபோல தங்கம் விலையும் கிராமுக்கு ₹25 அதிகரித்து ஒரு சவரன் ₹49,080க்கு விற்பனையாகிறது.