தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தவெக அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டுத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த 4 முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்குச் சபாநாயகர் JCD பிரபாகரன் அவர்கள் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக எம்.எல்.ஏ-க்களாக இருந்த இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் கட்சித் தாவல் தடைச் சட்டத்தை மீறி, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் 4 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தாலும், அவர்கள் மீது முறைப்படி தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் (EPS) தரப்பில் சபாநாயகரிடம் அதிரடியாகக் கடிதம் வழங்கப்பட்டிருந்தது.
இந்தக் கடிதத்தின் அடிப்படையில் அதிரடி ஆக்ஷனில் இறங்கியுள்ள சபாநாயகர் JCD பிரபாகரன், ராஜினாமா செய்த 4 பேரும் அடுத்த 7 நாட்களுக்குள் ஏன் உங்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சபாநாயகரின் இந்த அதிரடி உத்தரவு தவெக மற்றும் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
