விலங்குகளின் நடத்தை மனிதர்களை போலவே விசித்திரமானது என்று சொல்லப்படுவதற்குச் சிறந்த உதாரணமாக, சமீபத்தில் இணையத்தில் வைரலான குரங்குகளின் கும்பல் சண்டை வீடியோ அமைந்துள்ளது. சமூக ஊடகங்களில் வைரலாகும் அந்தக் காணொளியில், இரு பெரிய குரங்கு குழுக்கள், சாலையோரத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டது தெளிவாக காணப்படுகிறது. முற்றிலும் போர்க்களத்தைக் நினைவுபடுத்தும் இந்த காட்சிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
@AMAZlNGNATURE என்ற எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், முதலில் குரங்குகள் இரு தரப்பாகப் பிரிந்து உரக்க அலறி ஒருவரையொருவர் மிரட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சில நொடிகள் கழித்து, அந்த அலறல்கள் தாக்குதல்களாக மாறுகின்றன. குரங்குகள் ஒருவரையொருவர் தள்ளுகிறார்கள், நகங்களால் தாக்குகிறார்கள், சிலர் குதித்து எதிரிகளின் மீது பாய்கிறார்கள். சில குரங்குகள் கீழே விழுந்து காயமடைந்த காட்சிகளும் பதிவாகியுள்ளன. கோபமும், அதிர்ச்சியும், வன்மமும் அடங்கிய இந்த குரங்குக் கும்பல் சண்டை, அந்த பகுதியைச் சுற்றி உண்மையிலேயே பதற்றம் நிரம்பிய சூழ்நிலையாக்கியது.
Two rival gangs of wild monkeys fighting each other — this usually happens when a group of monkeys that is normally well-fed by visitors encounters another group, leading to a feud. pic.twitter.com/WsI5CP5NkB
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) September 12, 2025
வீடியோவுடன் இணைக்கப்பட்ட தகவலில், “இரண்டு போட்டி குரங்கு குழுக்கள் ஒருவரையொருவர் எதிர்க்கும்போது, சண்டைகள் உருவாகும். சுற்றுலாப் பயணிகளால் தொடர்ந்து உணவளிக்கப்படும் குரங்குகள், மற்ற குழுக்களை நெருக்கமாக சந்திக்கும் பொழுது இது வழக்கமாக நிகழும்,” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், “இவைகளும் தங்களது எல்லைகளைப் பாதுகாக்கிறார்கள் போல”, “மனிதர்களை விட சிறிதும் குறைவில்லை” என விமர்சிக்கின்றனர்.
