சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள ஒரு வீடியோவில், தனது உரிமையாளர் ஒரு ஆயுதத்தைக் கூர்மையாக்கும் காட்சியைப் பார்த்த நாய் ஒன்று, பயந்து, தானாகவே கூண்டுக்குள் ஓடி சென்று தன்னை பூட்டிக் கொள்கிறது. இச்சம்பவத்தின் காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. @DishaRajput24 என்ற ஐடியைப் கொண்ட சமூக வலைதளப் பக்கம் ஒன்றில் பகிரப்பட்டுள்ள இந்த 24 விநாடிகள் கொண்ட வீடியோ, இதுவரை 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.

ஒரு நபர், தனது வீட்டில் ஒரு ஆயுதத்தை கூர்மையாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அந்த நேரத்தில், அவரின் நாய் மற்றும் வாத்து அருகில் அமர்ந்து அவரைப் பார்த்துக்கொண்டிருந்தனர். வாத்து அமைதியாக இருந்தாலும், நாயின் முகத்தில் பயம் தெரிகிறது. சில நொடிகளில், அது அடங்காத பயத்தில் குரைத்து ஓடி சென்று, தான் தங்கி இருக்கும் கூண்டுக்குள் தன்னை பூட்டி விடுகிறது. “உரிமையாளர் தன்னை கொல்லப்போகிறார்” என எண்ணியிருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

இதன் பின்னணியில், வீடியோவை பகிர்ந்த பயனர்,  “கடின உழைப்பு அதிகமானபோது, பயமும் அதிகமாகிறது. இந்த வீடியோ பார்த்தால்தான் புரியும்,” என்ற வரியுடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் நாயின் உடல் மொழி, அதன் இயல்பு, மற்றும் அதன் தன்னார்வமான பாதுகாப்புத் தாக்கம் பார்வையாளர்களை நகைச்சுவை மனநிலைக்குள் இழுத்துச் சென்றுள்ளது. “நாயின் நடத்தை ஒரு சின்ன திரைப்படம் போல!” இருக்கிறது.